செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று செர்பியா வீரர் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 18வது கிராண்ட்சிலாம் பட்டத்தை அவர் வென்றுள்ளார்!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். தற்போது இந்த ஆண்டின் பட்டத்தையும் ஜோகோவிச் வென்றுள்ளார்.

28வது முறையாக கிராண்ட் ஸ்லாம் விளையாடும் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் தோற்றதில்லை என சொல்லப்படுகிறது.

ஆண்டி முர்ரே, நடால், வில்பிரட் சோங்கா, டொமினிக் தீம் ஆகிய முக்கியப்புள்ளிகளை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் முன்னதாக பல போட்டிகளில் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தே தீரும்: அமைச்சர் உதயகுமார்

Ezhilarasan

”அதிமுக அரசு ஒருபோதும் பாஜகவிற்கு அடிபணியாது”- அமைச்சர் சி.வி.சண்முகம்!

Jayapriya