தமிழகம் முக்கியச் செய்திகள்

கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் மாவட்ட காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரம் மாநில மனித உரிமை ஆணையம் கோவை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், இரவு நேரங்களில் உணவகங்களுக்கான நேரக்கட்டுப்பாடும் தீவிரமாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கோவையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அருகிலிருந்த பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு கோவை மாநகர காவல் ஆணையர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 12,908 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பதிலாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்யலாம்- மு.க.ஸ்டாலின்!

Jayapriya

’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!

Karthick

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Jeba