ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (RKA) எனும் மத்திய அரசின் அமைப்பு நாடு முழுவதும் பசு தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 900 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
இந்த தேர்வுக்காக இதுவரை 24 நாடுகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் இந்த தேர்வில் வெற்றி பெரும் நபர்களுக்கு மத்திய அரசு தரப்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
காமதேனு கௌ விஞ்ஞான் பிரச்சார் பிரசார் என்றழைக்கப்படுகிற இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் இதர தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவர் வல்லபாய் கத்திரியா கூறுகையில், “இதில் அறிவியல்பூர்வமற்றது என எதுவும் இல்லை. உள்நாட்டு பசு குறித்த அறிதலுக்காகவே இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 13 மொழிகளில் நடத்தப்படும் இந்த மாதிரியான தேர்வு இதுவே முதல்முறை என சொல்லப்படுகின்றது.
Advertisement: