உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள்

கொரோனா விதிமுறையை மீறிய பிரதமருக்கு ஒரு லட்சம் அபராதம்!

நார்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பேர்க் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அந்நாட்டு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நார்வே நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. நாட்டில் பத்த பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்பது கொரோனா விதிமுறைகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் பிரதமராக உள்ள எர்னா சொல்பேர்க் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பத்து பேருக்கு பதில் 13 பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக அந்நாட்டுக் காவல் துறை அவருக்கு 1,713 யூரோ அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,52,200 அபராதமாக தன்னுடைய நாட்டுப் பிரதமருக்கு நார்வே காவல் துறை விதித்துள்ளது.

இந்த அபராத தொகையை செலுத்திய நார்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் கொரோனா விதிமுறை மீறியதற்காக மண்ணிப்பும் தெரிவித்துள்ளார் என்பது கவனிப்படவேண்டிய விஷயமாகும்.

Advertisement:

Related posts

’மின்சார வாரியம் தனியார்மயமாகாது’- அமைச்சர் தங்கமணி!

Jayapriya

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

Gayathri Venkatesan

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.சாந்தா காலமானார்!

Niruban Chakkaaravarthi