செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

முதல்வர், மு.க. ஸ்டாலின், சீமான் வேட்புமனுக்கள் ஏற்ப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று தொடங்கிய நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி, நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தின் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக, 7 ஆயிரத்து 188 பேர், வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஆகியவை ஏற்கப்பட்டுள்ளன. போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இதற்கிடையே, மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாலை நிறைவடைகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற, நாளை மறுதினம் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement:

Related posts

கேரள மருத்துவ மாணவர்கள் நடனமாடிய வைரல் வீடியோ!

Gayathri Venkatesan

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வரும் 14ம் தேதி நாடு தழுவிய போராட்டம்! – விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

Nandhakumar