செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வெள்ளாளன் கோட்டை, வலசால்பட்டி, பெரியசாமிபுரம், பல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து யார் மீதும், யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்றார். ஜெயலலிதா மரணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

சசிகலாவை, அதிமுகவில் இணைப்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒங்கிணைப்பாளரும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜப்தி; நின்றுகொண்டே பணியாற்றிய அலுவலர்கள்!

Jeba

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு வாக்காளர் தகவல் சீட்டு: தேர்தல் அதிகாரி

Karthick

மேலிட தலையீட்டால் விரக்தி: கோவா ஆம் ஆத்மி தலைவர் ராஜினாமா!

Arun