செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

மொயீன் அலி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – காசி விஸ்வநாதன்

இங்கிலாந்து கிரிகெட் அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி தனது ஜெர்சியில் இருந்து மதுபான விளம்பரத்தை அகற்றுமாறு சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளரிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்து தனது அணியில் சேர்த்தது.

இதனையடுத்து சி.எஸ்.கே சமீபத்தில் வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கான புதிய ஜெர்சியை வெளியிட்டது. அதில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜெர்சியில் கமோஃப்லாக் லோகோவை சேர்த்துள்ளது. மேலும்
எஸ்.என்.ஜே 10000 விளம்பரத்தையும் ஜெர்சியில் சேர்த்துள்ளது.எஸ்.என்.ஜே 10000 என்பது சென்னையைச் சேர்ந்த எஸ்.என்.ஜே மதுபான பீர் நிறுவனமாகும். மேலும் எஸ்.என்.ஜே 10000 சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்பான்சர்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், தனது சட்டையிலிருந்து எஸ்.என்.ஜே 10000 என்ற விளம்பரத்தை அகற்றுமாறு மொயீன் அலி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மதுவை அருந்தவோ அல்லது ஊக்குவிக்கவோ நான் விரும்பவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மொயின் அலியின் கோரிக்கைக்கு சி.எஸ்.கே நிர்வாகம் ஒப்புதல் அளித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பின்னர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் சி.எஸ்.கே ஜெர்சியிலிருந்து எந்த ஒரு விளம்பரத்தையும் எடுக்க சொல்லி எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்- எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்!

Saravana Kumar

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை!

Saravana

நகைக்கடன் விவரங்களை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு!

Gayathri Venkatesan