செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது” -ஸ்டாலின்

“கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இனிமேல் இடம் கொடுக்க கூடாது” என மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சியினரை விமர்சித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சேலம், சீலநாயகன்பட்டியில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , “கருணாநிதிக்கு 6 அடி கொடுக்க மறுத்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இனிமேல் இடம் கொடுக்க கூடாது” என எதிர்க் கட்சியினரை விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும், “இத்தேர்தலில் மக்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும். தேர்தலுக்காக மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும், மக்களின் சுகதுக்கத்தில் பங்கேற்பவன் என்ற உரிமையோடு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். கூட்டணி வேட்பாளர்களுக்காக மட்டுமல்ல. எனக்காகவும் ஓட்டு கேட்கிறேன். நானும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகிறேன் கூட்டணி வேட்பாளர்கள் வென்றால்தான் நான் முதலமைச்சராக முடியும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுக்காலம் பின்னோக்கி போய்விட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி ஆட்சி மோடி, அமித்ஷாவிற்கு கட்டுப்பாட்டுக்குட்பட்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தித் திணிப்பின் மூலம் மாநில உரிமைகளை பறித்து வருகிறார்கள். ஆகவே தமிழகத்தில் நடைபெறும் தேர்தலானது ஆட்சி மாற்றத்திற்காகத்தான், நாங்கள் பதவி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த தமிழகத்தை காப்பாற்றுவதற்காக,சுயமரியாதை காப்பாற்றுவதற்காக, இழந்த உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, உரிமைகளை மீட்பதற்காக நடைபெறும் தேர்தல் இது என்று ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், “பழனிசாமியாக இருந்தாலும், பன்னீர்செல்வமாக இருந்தாலும் ஊழல்தான் பிரதானமாக உள்ளது. காவிரியில் உரிமை தர முடியாததாக மத்திய அரசும், அதை கேட்டு பெற முடியாததாக மாநில அரசும் உள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மூலம் தமிழகத்தின் மீது ரசாயன தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் தமிழை பயிற்றுவிப்பதில்லை. இதன் மூலம் கலாச்சார தாக்குதலை நடத்துகிறார்கள். மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால், கூடுதல் நிதி கிடைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். வர்தா புயல் ஏற்பட்டபோது, தமிழக அரசு 22,573 கோடி ரூபாய் கேட்டு, 261 கோடி ரூபாய்தான் பெறமுடிந்தது. நிவர் புயல் நிவாரண நிதியாக 9 ஆயிரம் கோடி கேட்டு 131 கோடிதான் பெற முடிந்தது. புரவி புயலின் 17 ஆயிரம் கோடி கேட்டபோது, 1140 கோடி மட்டுமே கிடைத்தது. ஜி.எஸ்.டி நிலவை வரவில்லை. கொரோனா கால நிதி வரவில்லை, பிறகு எதற்கு கூட்டணி?” என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “ராகுல் காந்தியை சார் என்று கூப்பிட்டேன். இனிமேல் சகோதரர் என அழைக்க வேண்டும் என்றார். எனவே, அவரிடம் உரிமை கலந்த அன்பான வேண்டுகோள். இந்தியா பாசிச மதவாத கும்பலிடம் மாட்டி மூச்சுத்திணறி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் மதச்சார்பற்ற சக்திகள் சேர்ந்ததால் பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜேபி வாஷ் அவுட் என்ற நிலை ஏற்படும். 37 சதவீத வாக்குகளை பெற்ற பிஜேபி ஆட்சியை பிடித்தது. 63 சதவீத மக்கள் பிஜேபியை எதிர்த்து வாக்குகளை பிரித்து போட்டு விட்டார்கள்.

தமிழ்நாட்டில் அமைந்தது போல மற்ற மாநிலங்களில் கூட்டணி ஏற்படவில்லை. ராகுல்காந்தி இந்தியா முழுவதிலும் பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். கலைஞர் மறைந்த நேரத்தில் அவர் விரும்பிய இடத்தில் அடக்கம் செய்ய எடப்பாடி அரசு அனுமதி அளிக்கவில்லை. பிரதமர் மோடி அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரும் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார்கள். அவர்களிடத்திலும் எடுத்து சொன்னோம். பார்க்கிறோம், பார்க்கிறோம் என்று சொன்னார்களே தவிர இம்மியளவும் உதவி செய்யவில்லை. கலைஞருக்கு 6 அடி கொடுக்க மறுத்த கயவர்களுக்கு தமிழ்நாட்டில் இனிமேல் இடம் கொடுக்க கூடாது.” என ஸ்டாலின் தனது உரையில் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Jeba

பணமோசடி வழக்கில் கைதான ICICI வங்கியின் முன்னாள் CEOக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

Niruban Chakkaaravarthi

வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Karthick