தமிழகம் முக்கியச் செய்திகள்

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது: டிடிவி.தினகரன்

ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகதான் தங்களுக்கு அரசியல் எதிரி என்றும், அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் அமமுக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமையாது என்று கூறிய டிடிவி. தினகரன், ஜெயலலிதா ஆட்சிதான் அமையும் என்றார்

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சசிகலா ஓய்வு எடுத்து வருவதாகவும், ஓய்வுக்கு பிறகு அனைத்திற்கும் அவர் பதில் சொல்வார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்று கூறிய டிடிவி தினகரன், தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

ஏற்காடு ஏரியில் 8 மாதங்களுக்கு பின்னர் படகு சவாரி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

Nandhakumar

ஜன. 27 ஆம் தேதி சசிகலா விடுதலை?

Niruban Chakkaaravarthi

கொரோனா 2ஆவது அலைக்கு சாத்தியக்கூறு குறைவு – அமைச்சர் விஜயபாஸ்கர்

Gayathri Venkatesan