இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

“கொரோனா தடுப்பூசிகளால் இரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படாது” -டிசிஜிஐ!

கொரோனா தடுப்பூசி ரத்த உறைவை ஏற்படுத்தாது என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம்(DCGI) தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகள் சில, கொரோனா தடுப்பூசியான ஆஸ்ட்ராஜென்காவை எடுத்துக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம்(DCGI), கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ரத்த உறைவு போன்ற பிரச்னைகள் ஏற்படாது என்றும் அப்படி ஏற்படுவதற்கான அறிவியல் சான்றுகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியாக ஆஸ்ட்ராஜென்காவை எடுத்துக்கொள்ளும்போது இரத்தம் உரைதல் பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் ஐரோப்பிய நாடுகளில் எழுந்தன. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்திலும் இத்தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தோனேசியாவில், தடுப்பூசி போடும் பணி இன்னமும் தொடங்கப்படாத நிலையில், ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கை காரணமாக இந்த தொடக்க பணியை தள்ளி போடுவதாக அந்நாடுகள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையகம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் பயன்படுத்துவதன் மூலம் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்படுவதில்லை என்றும், அதற்கான அறிவியல் சான்றுகள் ஏதும் இல்லையெனவும் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

நான்கே மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வழங்கிய மெக்கன்சி ஸ்காட்!

Jayapriya

சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

Gayathri Venkatesan

தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை!

Gayathri Venkatesan