இந்தியா முக்கியச் செய்திகள்

திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இணையம் வாயிலாக வன்முறைக் கருத்துக்களை பகிர்ந்ததாக பெங்களூரூவை சேர்ந்த திஷா ரவி என்கிற 25 வயது மாணவி டெல்லி காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தர்மேந்திர ராணா, இந்த வழக்கிற்கும், மாணவி திஷாவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையிடம் கேள்விகளை எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும், சூழ்நிலை சான்றுகள் மூலமாக மட்டுமே சதித்திட்டத்தைக் உணர முடியும் என்றும் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மாணவிக்கும், வழக்கிற்கும் சம்பந்தம் என நரூபிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதபட்சத்தில் ஏன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கேள்வியெழுப்பினார்.

திஷா தரப்பிலிருந்து, “காவல்துறை சார்பில் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் திஷாவை விடுவிக்க வேண்டும்” என வாதாடப்பட்டது.

இருதரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதி வரும் 23-ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

Advertisement:

Related posts

அரசின் அன்றாட நிகழ்வுகளில் ஆளுநர் தலையிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்: நாராயணசாமி

Niruban Chakkaaravarthi

பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Jayapriya

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு: UGC அறிவிப்பு!

Jayapriya