சினிமா செய்திகள் முக்கியச் செய்திகள்

நடிகை நிவேதா தாமஸிற்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழில் பாபநாசம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாமானிய மக்கள் மட்டுமின்றி திரையுலகினரும் அதிகளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீப காலத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழில் பாபநாசம், ஜில்லா, தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன். மேலும் கொரோனாவிலிருந்து மீள்வதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். மேலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி. அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். அன்புடன் நிவேதா” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement:

Related posts

மத்திய பட்ஜெட்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை!

Saravana

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு!

Jeba

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பயங்கர தீ விபத்து!

Ezhilarasan