ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த போவதாக நிசான், டாட்சன், மற்றும் மாருதி சுசுகி போன்ற பெரு நிறுவனங்கள் அதிரடியாக அறிவித்துள்ளது.
கார் தயாரிப்பில் உதிரி பாகங்களின் விலை கடந்த ஓர் ஆண்டு காலமாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் பிரபல கார் தயாரிக்கும் பெரும் நிறுவனங்களான நிசான், டாட்சன் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் கார்களின் விலையை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் உயர்த்த போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்த விலையுயர்வைப் பற்றிப் பேசிய நிசான் கார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ராகேஷ் ஸ்ரீவாஷ்டவா “கடந்த சில மாதங்களாகவே கார் தயாரிப்பதில் கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, இதை கட்டுப்படுத்த நாங்கள் பலகட்ட முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. இதனால், கார் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் இந்த கார்களின் விலை ரூ. 30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட விலை உயர்வு நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி விலை ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற காரணங்களை மாருதி சுசுகி நிறுவனமும் கூறி தாங்களும் தங்களின் கார்களின் விலைகளையும் உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement: