செய்திகள் முக்கியச் செய்திகள்

பிப்.19 சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன்: சி.டி.ரவி

கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள் குறித்து அதிமுக முடிவு செய்யும், என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி, மீண்டும் தமிழகம் வர இருப்பதாகவும், வரும் 25-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள விழாவில் அவர் பங்கேற்பார் எனவும் தெரிவித்தார். வரும் 19-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர இருக்கிறார் எனவும், வரும் 21-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக கூட்டணியில், அதிமுக முக்கிய கட்சி என்பதால், கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள் குறித்து அதிமுகவே முடிவு செய்யும் என மாநில பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி குறிப்பிட்டார்.

Advertisement:

Related posts

“திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது” – முதல்வர் பழனிசாமி

Jeba

மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!

Nandhakumar

இன்று தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

Jeba

Leave a Comment