கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதால் லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 59,856 பேர் குணமடைந்துள்ள நிலையில் 630 பேர் நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ, கான்பூர் மற்றும் வாரணாசியில் நாளையில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று லக்னோ காவல் கமிஷனர் டி.கே.தாகூர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
லக்னோவின் மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லக்னோவில், கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உடனடியாக இன்று முதல் ஏப்ரல் 15 வரை மருத்துவம், நர்சிங் மற்றும் பாரா மருத்துவ நிறுவனங்கள் தவிர அனைத்து அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படவுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (அலகாபாத்) பகுதியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், கான்பூர், வாரணாசி பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ளது.
Advertisement: