கடலூர் மாவட்டத்தில் 1930 ம் ஆண்டிற்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழை வரலாற்று சாதனை படைத்துள்ளது.
வளி மண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்று காலை கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனை பதிவு செய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் 8.30 மணி வரை கடலூரில் 18.6cm மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 09.2.1930 அன்று பெய்த 11.9cm மழையினை முறியடித்துள்ளது.
அதே போன்று புதுச்சேரியில் இன்று காலை 8.30 மணி பதிவின் படி 19.2cm மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 27.02.2000 அன்று பெய்த 11.7cm மழையினை முறியடித்துள்ளதாகும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையில் மழை முன்னறிவிப்பு உள்ளது. கடலூரில் மழைக்கு சிறிய இடைவெளி தற்போது நிலவுகிறது. இரவு 8 மணிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு 60% வாய்ப்பு உள்ளதாகவும் கடலூரில் 4 மணி நேரத்தில் 18cm மழை என்பது மிக கடுமையான மழை பொழிவாகும் என கடலூர் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement: