இந்தியா செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் படகு போட்டியில் தகுதி பெற்ற முதல் தமிழக வீராங்கனை!

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் படகோட்டும் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் இந்திய வரலாற்றில் முதல் முறையாக தகுதிபெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனைப்படைத்துள்ளார்.

ஜூலை 23-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆசியத் தகுதி சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது.

ஒலிம்பிக் போட்டிக்குத் தமிழகம் சார்பில் மட்டும் இதுவரை டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் என நான்கு பேர் தகுதிபெற்றுள்ளனர். இந்நிலையில் படகோட்டும் போட்டிக்காக இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமனன் முதல் முறையாக படகோட்டும் பிரிவில் தேர்ச்சிபெற்று சாதனைப்படைத்துள்ளார்.


படகோட்டும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இதுவரை யாரும் இப்போட்டிக்குத் தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்போட்டியில் தகுதி பெற்றுள்ள நேத்ரா குமனன் (23 )சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் படகோட்டும் போட்டியில் தனிநபர் பிரிவில் (Laser Radial) பங்கேற்றுள்ளார்.

பொறியாளரான நேத்ரா குமனன் கடந்த 2014, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள மியாமில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் படகோட்டுதல் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் இவரையே சாரும். படகோட்டும் போட்டியில் சிறுவயதிலிருந்தே கலந்துகொண்டுவரும் நேத்ரா தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கடலில் அலைகடலின் நடுவே தமிழக பெண் நேத்ரா குமனனின் படகு அலைகளைக் கிழித்து சாதனைப்படைத்த சரித்திரத்தை உருவாக்கட்டும்.

Advertisement:

Related posts

மாநில அந்தஸ்து இல்லையெனில் தேர்தல் புறக்கணிப்பு: நாராயணசாமி கருத்து!

Nandhakumar

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது

Jayapriya

சசிகலா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya