செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு 79 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லை மாநகராட்சியில் மட்டும் 53 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், அம்மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Related posts

நகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்!

Niruban Chakkaaravarthi

காதலுக்கு உதவி கேட்ட இளைஞருக்கு புனே காவல் ஆணையரின் சாமர்த்திய பதில்!

Gayathri Venkatesan

தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு!

Gayathri Venkatesan