இந்தியா

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிராகரிப்பு

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ந்தியா முழுவதும் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளை ஒழுங்கு படுத்தும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2012-ம் ஆண்டு நீட் தேர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கெதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றின. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு பயத்திலோ, தேர்வில் தோல்வியுற்ற வருத்தத்திலோ ஆண்டுதோறும் தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மக்களவை கூட்டத்தொடரில், நாமக்கல் எம்.பி சின்ராஜ், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு மத்திய அரசு பதில் மனு அனுப்பிவிட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிப்பது இந்திய மருத்துவ சட்டத்துக்கு எதிரானது. அதனால், அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது என பதிலளித்துள்ளது.

Advertisement:

Related posts

சட்டப்பேரவைத் தேர்தல்: மத்திய உள்துறை செயலாளரிடம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

Saravana

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

Gayathri Venkatesan

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

Dhamotharan

Leave a Comment