இந்தியா

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி..

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் நாய்களுக்கு கொரோனா கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர் முறைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய ராணுவத்தில் இருக்கும் நாய்களுக்கு வியர்வை மற்றும் சிறுநீரில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தை கண்டறிய பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக லாப்ரடர், நாட்டு நாய்கள் மற்றும் சிப்பிபரை வகை நாய்களுக்கு சிறுநீரில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு வியர்வை மாதிரிகளில் இருந்து கொரோனா கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

லடாக் மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள எல்லைகளில் காவல் பணியில் ஈடுபட செல்லும் வீரர்களை சோதனை செய்வதற்காக சண்டிகரில் 2 நாய்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தற்போது 8 நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாய்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்தப்ப்ட்ட கொரோனா மாதிரிகள் மலட்டுத்தன்மை வாய்ந்தவை. இதனால், வைரஸ் நாயின் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என அதன் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement:

Related posts

மது போதையில் தாயை கொன்று இறுதிச் சடங்கில் கோழி கறி சமைத்த மகன்!

Jayapriya

இந்தியாவில் 1 கோடியை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Niruban Chakkaaravarthi

அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?

Saravana

Leave a Comment