தமிழகம் முக்கியச் செய்திகள்

தேசிய கொடி பொறித்த கேக் வெட்டிய விவகாரம்: கலெக்டர், டிஎஸ்பிக்கு எதிரான மனு தள்ளுபடி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தேசிய கொடி பொறித்த கேக்கை வெட்டி உண்டதாக, அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை , சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கோவையில், 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதநல்லிணக்கத்துக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், தேசிய கொடி பொறிக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி உண்டதாக கூறி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்போதைய மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், காவல் துணை ஆணையர் பர்வேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக இந்து பொது கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கோவை நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கோவை நீதிமன்றம், அவர்கள் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகை செய்தி அடிப்படையில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அரசு ஊழியர்கள் மீது அரசின் முன் அனுமதியின்றி வழக்கு தொடரும்படி உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பவத்தின் நேரடி சாட்சியாக இல்லாத, புகாரதரரான செந்தில்குமார், பத்திரிகை செய்தி அடிப்படையில் அளித்த புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறி, கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பவர்கள், தேசிய கொடியை சட்டையில் அணிவதைச் என சுட்டிக்காட்டிய நீதிபதி, நிகழ்ச்சி முடிந்த பின் கொடியை அணிந்திருக்க மாட்டார்கள்… இதை தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது எனவும், அப்படி கருதினால், தேசிய கொடியை கையாள தயக்கம் காட்டுவர் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

மதுரையில் 17ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு, மாலைக்கோவில் கண்டுபிடிப்பு!

Gayathri Venkatesan

“ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை” – கனிமொழி

Karthick

என்னை குடும்பத்தில் ஒருவனாக மக்கள் பார்க்கிறார்கள்: சைதை துரைசாமி !

Karthick