இந்தியா ஒருபோதும் சதிச் செயல்களை அனுமதிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நெடுஞ்சாலை பணிகளுக்கான அசோம் மலா என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2020ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் தேயிலைத் தொழிலாளர்கள் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். அசாம் தேநீருக்கு நாடு முழுவதும் நல்ல மதிப்பு இருப்பதாகக் கூறிய அவர், அதற்கு அவப்பெயர் கொண்டுவர வெளிநாட்டவர் சிலர் முயற்சிக்கின்றனர். அது தொடர்பாக ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா பெயரை கெடுக்கும் விதமாக அவர்கள் சதி ஒன்றை பின்னப் பார்கிறார்கள். இதற்கான பதிலை அவர்களுக்கு பின்னால் இருக்கும் சில அரசியல் கட்சிகளிடம்தான் கேட்க வேண்டும். இந்த சதியினை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்திற்கு சென்று பாஜக சார்பில் தனது முதல் தேர்தல் பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
Advertisement: