செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கோவையில் நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்கு இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்துள்ளார். முதல்கட்டமாக காலையில் புதுச்சேரிக்கு சென்ற பிரதமர் நான்கு ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை வந்து அங்கிருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அங்கு கோவை, கொடீசியா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சில் கலந்துகொண்ட அவர், 12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் திட்டதத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எட்டு வழிச்சாலை கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ. 107 கோடி செலவில் ஒன்பது ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ. 330 கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “தொழில் வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது மின்சாரம். அதற்கு நெய்வேலியில் இன்று திறந்துள்ள புதிய அனல் மின் திட்டம் தொழில்வளர்ச்சிக்கு மிகமிக்கிய பங்காற்றும். அதில் உற்பத்தியாகும் 65 சதவீதம் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும். வ.உ.சிதம்பரனார் துறைமுகம், கப்பல் போக்குவரத்து துறைக்கு சரக்கு கையாளும் மிக முக்கியமான துறைமுகமாக மாறும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அருகில் கோரம்பள்ளத்திற்கு செல்ல போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக, எட்டு வழிச்சாலை போடப்படும். வளர்ச்சியும், சுற்றுசூலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தற்சார்பு முறைக்கு எடுத்துகாட்டாக ஐந்து மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கி வைத்தது எனக்கு மகிழ்ச்சி.

தனிநபரின் கன்னியத்தைக் உறுதிபடுத்துவதும் வளர்ச்சியின் ஒரு அங்கம். அதற்கு பிரதமர் நகர்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இன்று பலருக்கு வீடு தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அதிகம் நகரமயமான மாநிலமாகும். இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்வாதத்திற்க்கு உந்துசக்தியாக மாறும்.” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்!

Jeba

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

சசிகலாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்!

Niruban Chakkaaravarthi