செய்திகள் முக்கியச் செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் நல்லகண்ணு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பட்டு வந்தது. கடந்த 6 நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து நல்லகண்ணு நேற்று மாலை வீடு திரும்பினார்.

Advertisement:

Related posts

உரையின் போது கண்கலங்கிய ஜோ பைடன்!

Niruban Chakkaaravarthi

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை!

Karthick

லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து படைகளை திரும்பப் பெறும் சீன ராணுவம்!

Niruban Chakkaaravarthi