இந்தியா சினிமா முக்கியச் செய்திகள்

கொரோனா பாதுகாப்பு.. ரசிகர்களுக்கு பிரபல நடிகை அட்வைஸ்!

கொரோனா பாதுகாப்பு தொடர்பாக ரசிகர்களுக்கு பிரபல நடிகை நதியா அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றுக் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் அல்லாடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிரபல நடிகை நதியாவும் பாதுகாப்பாக இருங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

கையில் புத்தகத்தை வைத்தபடி வீட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நதியா, கேப்ஷனாக, நீங்கள் வீட்டில் ’மாட்டி’க் கொண்டிருக்கவில்லை. அங்குதான் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே, பாதுகாப்பாக இருங்கள் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

L.Renuga Devi

லெஹெங்காவில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்!

Jayapriya

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

L.Renuga Devi