தமிழகம்

வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்!

மதுரையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன், இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள், இரண்டரை லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

புகாரின் பேரில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டபோது, அதே பகுதியில், மேலும் 4 ஆளில்லாத வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement:

Related posts

பக்கத்து வீட்டின் குளியலறையை எட்டிப்பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்த நபருக்கு கத்திக்குத்து!

Saravana

ஜன. 27 ஆம் தேதி சசிகலா விடுதலை?

Niruban Chakkaaravarthi

தாய், தந்தையின் ஆதரவின்றி பசியால் வாடும் 6 வயது சிறுவன்; மனதை உருக வைக்கும் நிகழ்வு!

Jayapriya

Leave a Comment