செய்திகள்

“அதிமுகவின் கனவு பகல் கனவு” – முத்தரசன் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் பணபலத்தினை நம்பியுள்ள கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் அக்கட்சி செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக என்பது பேராபத்துக்குரிய கட்சி. அந்த பேராபத்துக்குரிய கட்சி தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது. அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி அவர்களின் தோள் மீது இல்லாமல், தலையில் சவாரி செய்து கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்க பாஜக முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் வகுப்புவாத கட்சியை தோற்கடிக்க வேண்டும், மேலும் வகுப்புவாத கட்சியை ஆதரிக்கும் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். இந்த தேர்தலை முழுக்க முழுக்க சொந்த பலம், கூட்டணி பலம் என எதையும் நம்பாமல் பண பலத்தை மட்டுமே நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் தான் அவர்கள் உள்ளார்கள் என விமர்சித்த அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என கனவு காணும் அதிமுகவின் கனவு பகல் கனவுதான் என அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்:பூண்டி வெங்கடேசன்!

Karthick

தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளத்தில் வைரல்!

Gayathri Venkatesan

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

Gayathri Venkatesan