தமிழகம் முக்கியச் செய்திகள்

மக்கள் எதிர்பார்த்தபடி ஆட்சி மாற்றம் நிகழும் : முத்தரசன்

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைமைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணியின் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், கருத்துக்கணிப்புகளை எல்லாம் மீறி அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். தமிழக மக்கள் எதிர்பார்த்தபடி ஆட்சி மாற்றம் நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரி, எண்ணிக்கை குறித்து அங்குள்ள கரும்பலகையில் எழுதுவது மட்டுமில்லாமல் பகிரங்கமாக ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்க வேண்டும் என்றும் முத்தரசன் கேட்டுக் கொண்டார்.

Advertisement:

Related posts

கைகளில் பானையுடன் பிச்சை கேட்டு நூதன முறையில் போராடிய தூய்மை பணியாளர்கள் !

Jeba

குமரியில் விஜய் வசந்த் விருப்ப மனு தாக்கல்

Gayathri Venkatesan

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jeba