செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!

முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாக நிலக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் முருகவேல் ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பாக, கூட்டணியில் உள்ள மக்கள் விடுதலைக் கட்சியின் வேட்பாளர் முருகவேல்ராஜன் போட்டியிடுகிறார். புதூர் பகுதியில் இஸ்லாமியர்களிடையே முருகவேல் ராஜன் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பிரதமர் மோடியோடு எடப்பாடி பழனிசாமி கை கோர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே, பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

Advertisement:

Related posts

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jeba

வேளாண் சட்டங்கள்: வீட்டு வாசலில் கோலமிட்டு எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள்!

Jayapriya

பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?

L.Renuga Devi