இந்தியா செய்திகள்

மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல் மே 2 வரை தடுப்பூசி செலுத்தப்படாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களுக்குள், தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றால் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலமாகத் தகவல் கொடுக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பால் 45 வயத்திற்கு மேற்பட்டவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் பதற்றத்தில் தடுப்பூசி மையங்களுக்கு வெளியே கூட்டமாக நிற்க வேண்டாம் என்றும் மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையர் அஸ்வின் பிடே நேற்றைய தினத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ‘புதிதாக ஆடர் செய்திருக்கும் தடுப்பூசியின் டேஸ்கள் கிடைக்கப் பெற்ற பிறகே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கு’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார். மும்பையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரிக்கவில்லை என்றாலும் மகாராஷ்டிராவில் நேற்றைய தினத்தில் 66,159 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 771 மரமணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சினிமாவில் ஹீரோ: நிஜ வாழ்வில் வில்லன்

Niruban Chakkaaravarthi

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

Jayapriya

அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமே மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan