செய்திகள் முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் டி-20 இன்று தொடக்கம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 க்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2020-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான போட்டிகள் இன்று தொடங்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளதால் மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் டி-20 தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisement:

Related posts

மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக உள்ளோம்: நாராயணசாமி

Niruban Chakkaaravarthi

வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!

Karthick

காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது: காங்., மூத்தலைவர் கபில் சிபல் விமர்சனம்

Niruban Chakkaaravarthi