முக்கியச் செய்திகள் விளையாட்டு

பெங்களூரு அணிக்கு 160 ரன்கள் இலக்கு..

பெங்களூரு அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 14வது ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீர்ர்களாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்த நல்ல தொடக்கத்தை அமைப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரோகித் சர்மா 19 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இது மும்பை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், கிரிஸ் லினின்னுடன் இணைந்து அணியின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு பார்டன்ர்சிப் அமைத்த நிலையில், சூர்யகுமார் 31 ரன்னிலும், லின் 49 ரன்னிலும் வெளியேறினர்.

அவர்களை தொடர்ந்து வந்த இஷான் கிஷன் 28 ரன்கள் அடித்த நிலையில், LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக லின் 49 ரன்களும் சூர்யகுமார் 31 ரன்களும் சேர்த்தனர். பெங்களூரு அணியில் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Advertisement:

Related posts

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!

Karthick

டெஸ்ட் போட்டி: சென்னை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

Saravana

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதில்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Niruban Chakkaaravarthi