இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!

மும்பையில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கோரியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பந்தப் பகுதியில் அமைந்துள்ள ட்ரீம்ஸ் மாலில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு மாடி கட்டடமான அந்த மாலில், மளமளவென பரவிய தீயானது, மூன்றாவது தளத்தில் இருந்த கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைவிக்கும் பரவியுள்ளது.

இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதால் 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்தது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் வெகு நேரமாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், அந்த மருத்துவமனையில் சுமார் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 70 பேர் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தீ விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், படுகாயம் அடைந்தவர்கள் உடல்நலம் தேறிவர தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததோடு மேலும் சம்பவம் தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

முன்னதாக மும்பை மேயர் சம்பவம் குறித்து பேசியதாவது, மால் உள்ளே மருத்துவமனை கட்டப்பட்டதை தாம் முதல் முறையாக அறிந்திருப்பதாக தெரிவித்த அவர், தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 77 லட்சமாக உயர்வு!

Saravana

வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!

Jeba

கன்னியாகுமாரி மக்களவை தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி?

Gayathri Venkatesan