இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் அம்பானி, அதானி!

இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியிலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

நடப்பாண்டின் (2021) இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி குமுழுமத்தின் தலைவரான கௌதம் அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளதாக தனியார் செய்தி நிறுவனமான ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவித்துள்ளது.

முதலிடத்திலுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.8,450 கோடியாகும், கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.5,050 கோடியாகும்.

முன்னதாக இந்தியாவில் வணிக முதலீட்டில் ரூ.1,000 கோடியை கடந்த மூன்றாவது நிறுவனமாக அதானி குழுமம் இடம்பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்காரர் இடத்தினை தமிழகத்தை சேர்ந்த சிவ நாடார் பிடித்துள்ளார். எச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரான இவரின் நிகர சொத்து மதிப்பானது ரூ.2,350 கோடியாகும்.

ஃபோர்ப்ஸ் இதழின் அறிக்கையின்படி இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு 38 அதிகரித்து, 140 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 102 ஆக இருந்தது.

இந்திய பங்கு சந்தை மதிப்பின்படி அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்களின் மதிப்பானது 104 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் பங்குள் எப்போதும் உச்சத்திலேயே இருந்துள்ளன.

அதானி குழுமத்தைத் தொடர்ந்து, டாடா குழுமமும் தற்போது வணிக முதலீட்டில் ரூ.1000 கோடியை கடந்துள்ளது.

Advertisement:

Related posts

டெல்லி: இருவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

Jeba

புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

Jeba

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி: திமுக தீவிரம்!

Jeba