உலகம் செய்திகள் முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

கணவரை பிரிந்து வாழ்வதால் பறிக்கப்பட்ட Mrs.Srilanka அழகி பட்டம்!

கணவரை பிரிந்து வாழ்வதால் இலங்கை அழகியான புஷ்பிகா டி சில்வாவின் Mrs.Srilanka அழகி பட்டம் பறிக்கப்பட்டது.

இலங்கை, கொழும்பிலுள்ள நெலம் போகுனா மஹிந்த ராஜபக்‌ஷே திரையரங்கில் கடந்த ஞாயிறன்று “திருமதி இலங்கை” அழகிப்போட்டி நடைபெற்றது. இலங்கை மட்டுமின்றி பிற நாட்டு அழகிகளும் இதில் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த போட்டி அமைப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் இலங்கையைச் சேர்ந்த அழகி புஷ்பிகா டி சில்வாவிற்கு “திருமதி இலங்கை” அழகிப் பட்டத்தை அளித்தனர்.

“திருமதி இலங்கை” அழகி போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு நிச்சயமாகத் திருமணம் முடிந்திருக்க வேண்டும் என்பது இப்போட்டியின் விதிமுறையாகும். அதுமட்டுமின்றி கணவருடன் இணைந்து வாழ்பவர்களுக்கு மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள முடியுமென்ற மேலும் ஒரு விதிமுறையும் உள்ளது. இந்நிலையில் சற்றும் எதிபாராத வகையில் புஷ்பிகா டி சில்வா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து 2019ம் ஆண்டின் “திருமதி இலங்கை” அழகியான கரோலின் ஜூரி மேடையில் அழகிப்பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தைப் பறித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குக் கிரீடத்தைச் சூட்டினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புஷ்பிகா டி சில்வா கண்ணீருடன் மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றார். மேலும் இவரை அவமானம் செய்ததற்காகப் ஈபோட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் மீதும் கரோலின் ஜூரி மீதும் புகார் அளிக்கப்போவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து “திருமதி இலங்கை” அழகிப்போட்டியின் தேசிய இயக்குநர் சண்டிமால் ஜெயசிங், செய்தியாளர்களிடம் கூறுகையில், “புஷ்பிகா டி சில்வா கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றாலும் சட்டரீதியாக இன்னும் விவாகரத்து செய்யவில்லை. கரோலின் ஜூரி அவரை அவமானம் செய்ததற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் செவ்வாய்கிழமையன்று கிரீடத்தை மீண்டும் புஷ்பிகா டீ சில்வாவிடம் திருப்பிக்கொடுக்கவுள்ளோம்” என்று கூறினார்.

Advertisement:

Related posts

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

Gayathri Venkatesan

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி!

Niruban Chakkaaravarthi

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்: 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்

Niruban Chakkaaravarthi