செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

ஓட்டுக்காக நாடகமாடும் கட்சி திமுக – எம்.ஆர். விஜயபாஸ்கர்

ஓட்டுக்காக நாடகம் ஆடுவது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தி கிராமம், ஜே. ஜே. நகர், சிவாஜி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய விஜய பாஸ்கர், காந்திகிராமம் பகுதியில், எதிர்ப்பை மீறி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டி வரலாறு படைக்கப்பட்டதாகவும் கொரோனா காலத்தில் இந்த மருத்துவமனை உதவிகரமாக இருந்ததாகவும் கூறினார். ஓட்டுக்காக நாடகம் ஆடுவது திமுகவினரின் வாடிக்கையாகிவிட்டது எனவும் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

Advertisement:

Related posts

கொரோனோ தடுப்பூசி போடும் பணிகளை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Niruban Chakkaaravarthi

இனவெறி சர்ச்சை; பந்துவீச்சை நிறுத்திய சிராஜ் – மன்னிப்பு கேட்ட ஆஸி.,

Jayapriya

10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

Saravana Kumar