செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள் நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்பு அளித்தனர். தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதால், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன்னால் மக்களிடம் வாக்கு கேட்க முடிவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

மேற்கு வங்கம், அசாமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 துப்புரவு பணியாளர்கள் பலி

Jayapriya

பொங்கல் பண்டிகை; சென்னையில் இருந்து இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Saravana