கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகவும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதால் தான் தற்போது மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது எனக் கூறினார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தொகுதிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழக முதல்வரின் தாயார் பற்றி அநாகரிகமாக பேசும் திமுகவினர், ஆட்சிக்கு வந்தால் பெண்கள் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
Advertisement: