குழந்தை வளர்ப்பில் செஞ்சூரி அடிக்க துடிக்கும் ரஷ்ய தம்பதியினறைக் குறித்த செய்தி சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர் 23 வயதான கிறிஸ்டினா. இவருடைய கணவர் காலிப். இவர் அந்த நாட்டில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கும், தன்னுடைய கணவருக்கும் குழந்தைகள் மீது விருப்பம் அதிகம் என கிறிஸ்டினா கூறுகிறார். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளுள் ஒரு குழந்தையை மட்டுமே கிறிஸ்டினா இயற்கையாக பெற்றெடுத்துள்ளார். மீதமுள்ள குழந்தைகளை அவரிடமிருந்தும், அவருடைய கணவரிடமிருந்தும் மரபணு ரீதியாக வாடகை தாய் மூலம் பெற்றதாக தெரிவித்தார்.
வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுப்பது ரஷ்யாவில் சட்டப்பூர்வமானது. இந்நிலையில் அவருக்கு மொத்தமாக 105 குழந்தைகள் பெற வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்திருந்தார். மேலும் அவர் இறுதியில் தனக்கு எவ்வளவு குழந்தைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியாது என்றும் குழந்தைகளின் எண்ணிக்கையை நிறுத்துவது குறித்து திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய விருப்பத்தை ஆதரித்த கணவர் தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு மனைவி அமைந்துள்ளதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Advertisement: