குற்றம் முக்கியச் செய்திகள்

திருமணம் செய்து வைக்குமாறு சண்டையிட்ட மகனை கொலை செய்த தாய்!

திருமணம் செய்து வைக்குமாறு தொந்தரவு கொடுத்த மகனை கொலை செய்த தாய் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தெலங்கானா மாநிலம் புலமடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமம்மா. இவரது மகன் சிவபிரசாத் மதுஅருந்திவிட்டு தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை தருவதோடு திருமணம் செய்து வைக்கும்படி கூறி அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தாய் லட்சுமம்மா தனது தாய், சகோதரர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சிவபிரசாத்தை கொலை செய்துவிட்டு பிலாப்பூர் கிராமம் அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டி புதைத்தனர்.

பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி லட்சுமம்மா தனது மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மகனின் தொல்லை தாங்க முடியாமல் லட்சுமம்மா தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்களை வைத்து பணம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:

Related posts

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்

Nandhakumar

வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

Jeba

பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!

Saravana

Leave a Comment