இந்தியா செய்திகள் முக்கியச் செய்திகள்

பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம்!

வர்த்தகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சார்பில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாட்டில் சமீப நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வானது அதிகரித்து பல மாநிலங்களில் புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்கள் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் எரிவாயு விலை அதிகரிப்பு, ஜிஎஸ்டி-யின் விதிமுறைகளின் திருத்தம் ஆகியவைகளை கண்டித்து மத்திய அரசிற்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் நாட்டில் பெருவாரியான மாநிலங்களில் உள்ள பல முக்கிய பகுதிகளில் வணிக கடைகள், காய்கறி சந்தைகள் செயல்படாமல், மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியாக காட்சியளிக்கிறது.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கீழ் செயல்படும் சுமார் 40 ஆயிரம் வணிகர் சங்கங்கள் அதாவது 8 கோடிக்கும் அதிகமான வணிகர்கள் உள்பட போக்குவரத்து தொழிலாளர்களும் இணைந்து இந்த முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதிலும் சுமார் ஆயிரத்து 500 நகரங்களில் வணிகர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன் – ராகுல்காந்தி!

Jayapriya

மத்திய அரசு ஆணவத்தை விடுத்து, விவசாயத்துக்கு எதிரான புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்! – ராகுல்காந்தி

Nandhakumar

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

Niruban Chakkaaravarthi