முக்கியச் செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த மோகன்லால், பிரித்விராஜ்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் ஜெர்சியை மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோருக்கு பரிசளித்த நிலையில் இருவரும் அவருக்கு நன்றியுடன் சேர்த்து வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் ஜெர்சி, கிரீட்டிங் கார்டு ஆகியவை அடங்கிய பரிசு பெட்டியினை மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோருக்கு பரிசளித்தார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சஞ்சூ சாம்சனுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

இதற்கு நன்றி கூறும் விதமாக மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “தான் பெற்ற பரிசினை புகப்படம் எடுத்துப் பகிர்ந்ததுடன் ராஜஸ்தான் அணி இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோன்ற நடிகர் பிரித்விராஜும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு நன்றி கூறும் விதமாகப் பதிவு ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது: “இந்த முறை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது மும்பையின் வான்கடே மைதனத்தில் ராஜஸ்தான் ட்ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே போட்டிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

Niruban Chakkaaravarthi

மீண்டும் களமிறங்கும் சைக்கிள்?

Niruban Chakkaaravarthi

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Niruban Chakkaaravarthi