இந்தியா

ஜெயலலிதாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்த மோடி..

ஏழை மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் மூலம், ஜெயலலிதா பரவலாக போற்றப்படுவதாக, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சியினரால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள, அம்மா அருங்காட்சியகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் செயல்கள் மற்றும் மக்களுக்கு ஆதரவான கொள்கைகள் வாயிலாக ஜெயலலிதா பரவலாக போற்றப்படுகிறார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு குறிப்பிடத்தக்க செயல்களில் ஜெயலலிதா ஈடுபட்டார். அவருடனான பல்வேறு சந்திப்புகளையும் தான் நினைவு கூர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

விவசாயிகளின் போராட்டங்கள் நாட்டிற்கு நல்லதல்ல: ராகுல் காந்தி

Jayapriya

கல்லூரி மாணவர்களுக்கு நற்செய்தி… கல்வி கட்டணம் குறித்து UGC புதிய அறிவிப்பு!

Saravana

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது

Jayapriya