செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

நான் வெற்றி பெற்றால் சட்டமன்ற அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் : மகேந்திரன்!

நான் வெற்றி பெற்றால் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சட்டமன்ற அலுவலகம் அமைக்கப்படும் என கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் உறுதி அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம், ஒலம்பஸ், பாரதி நகர் போன்ற பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் துணை தலைவரும் அக்கட்சியின் வேட்பாளருமான டாக்டர் மகேந்திரன் வாக்கு சேகரித்தார்.

திறந்த வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அவர், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என விமர்சித்தார்.

நான் ஆட்சிக்கு வந்தால் அடிக்கடி மக்களைச் சந்திப்பேன் எனக் கூறிய மகேந்திரன், தமிழத்தின் முன்னோடி தொகுதியாக சிங்காநல்லூர் தொகுதியை மாற்றுவேன் என்றும் உறுதி அளித்தார்.

Advertisement:

Related posts

உலக வன தினம்; முதல்வர் பேச்சால் சர்ச்சை

Saravana Kumar

தேவேந்திர குல வேளாளர் குறித்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!

Jeba

மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Ezhilarasan