முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என நாமக்கல் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய எனக்கு, தமிழக முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்துகொண்டு, மின்மிகை மாநிலம் என கூறி வருகின்றனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் உண்மையான மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என உறுதியளித்தார்.
இதையடுத்து, திண்டுக்கல்லில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
Advertisement: