செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வலிறுத்தல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ. 4,000 வழங்கப்படும் உள்ளிட்டவற்றை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதனை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையிலான குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை தயார் செய்ததாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களை மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வாசித்தார்.

அதில், திருக்குறளை தேசிய நூலாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ. 4,000 வழங்கப்படும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலிறுத்தப்படும். ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும். முதற்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும். நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். பணியில் இருக்கும் காவலர் உயிரிழந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும். 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் நலன்காக்க தனி ஆணையம் அமைக்கப்படும். மேலும் அவர்களின் ஓய்வூதியமும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்கப்படும். அளுங்கட்சி அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கப்படும். சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ. 10ஆயிரம் மானியம் வழங்கப்படும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும். முதியோருக்கான உதவித்தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்படும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

மாணவர்கள்

கல்வி மாநில பட்டியலில் இணைக்க முயற்சி எடுக்கப்படும். கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டாவுடன் Tablet வழங்கப்படும்.

பெண்கள்

அரசு வேலையில் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும். நகர்புற – கிராமப்புற அரசுப் பேருந்துகளில் (town bus) மகளிருக்கு இலவச பயணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான எதிரான சைபர் குற்றங்களை களை சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்

ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும். சென்னை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க குழு. 2 லட்சம் வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கம். தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்.

மீனவர்கள், மாற்றுத்

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். மீனவ சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் இழப்பீடு மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படாது. மீதமுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும், 80 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும் வழங்கப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும். மசூதி தேவாலயம் சீரமைக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement:

Related posts

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!

Jayapriya

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமா நாராயணசாமி அரசு?

Gayathri Venkatesan

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்

Karthick