கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதற்காக இன்று சென்னை அயனாவரத்தில் உள்ள ஆறாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் வந்த மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு அப்பகுதியில் தொடணர்களுக்கு மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட கோவை கிழக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் போடியிடுவதற்காக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement: