கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, விரைவில் குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக எம்பி கனிமொழி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அறிந்து தாம் வருந்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், கனிமொழி விரைவில் பரிபூரண நலம்பெற பிரார்த்திப்பதாகவும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement: