செய்திகள் தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

சொந்த தொகுதியில் வாக்களித்த அமைச்சர்கள்!

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கே.பி. அன்பழகன், கெரகோடஹள்ளி அரசு பள்ளியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5-ஆவது முறையாக பாலக்கோடு தொகுதியில் போட்டியிடுவதாகவும், மீண்டும் வெற்றி பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஊரான திருத்தங்கல்லில் வாக்களித்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். இவர் தனது சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் உள்ள, கே.எம்.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்து, ஜனநாயக கடமையாற்றினார்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார். கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று அவர்கள் வாக்கு செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுகவினர் விதிகளை மீறி நடந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது!

Niruban Chakkaaravarthi

அண்ணன் தலையில் கல்லை போட்டு கொன்ற தம்பி!

Niruban Chakkaaravarthi

“பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்

Saravana Kumar