செய்திகள் தமிழகம் முக்கியச் செய்திகள்

“மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்!”

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத்துறையினரின் தொடர் உழைப்பால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர் விஜபாஸ்கர், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்த வரை 3 லட்சத்து 59 ஆயிரம் முன்களப் பனியாளர்கள் நேற்று வரை தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு நாளுக்கு பத்தாயிரம் என்கிற எண்ணிக்கையில் ஊசிகள் போடப்பட்டு வருகிறது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் இரண்டாவது அலை வருவதற்கு சாத்திய கூறுகள் மிகவும் குறைவு எனக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு இதுவரை கோவாக்சின் – 1,89,000, கோவிஷீல்ட் – 14,85,000 ஊசிகள் வந்துள்ளது. பொதுமக்களுக்கு ஊசி போடுவது குறித்து ஒப்புதலுக்காக காத்து இருக்கிறோம் வந்தவுடன் ஆரமிப்போம் என்று தெரிவித்தார்.

Advertisement:

Related posts

ரூ.7 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் Citroën எஸ்யூவி கார்!

Arun

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Nandhakumar

தேவேந்திர குல வேளாளர் மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்! – பிரதமர் மோடி

Nandhakumar